தஞ்சை மே 29: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சிக்கு கிருமி நாசினி ஸ்பிரே மிஷின் வழங்கப்பட்டது.

தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதன் பேரில் பட்டுக்கோட்டை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மூன்று கிருமி நாசினி ஸ்பிரே மிஷின் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு வழங்கப்பட்டது.

இதை ஆணையர் சென்னு கிருஷ்ணனிடம், நகர தலைவர் ஆதிராஜாராம் வழங்கினார். இதில் தூய்மைப் பணியாளர் ஆய்வாளர்கள் அறிவழகன், ரவி, ஆரோக்கியசாமி மற்றும் நகர விவசாய அணி தலைவர் சதீஷ், நகர நிர்வாகிகள் குமார், ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்