தஞ்சாவூர் அக் 09: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உலக ரொட்டி தினத்தை முன்னிட்டு ஆயிரம் நோயாளிகளுக்கு ரொட்டி இலவசமாக வழங்கப்பட்டது.

ஆண்டு தோறும் அக்டோபர் 8 ஆம் தேதி உலக ரொட்டி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரொட்டி ( பிரட் ) அத்தியாவசிய உணவு வகையில் மிகவும் முதன்மையானது. உடல் நலிவுற்றோர், பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றோர் பசித்தவுடன் உண்ணுவதற்கு ஏற்ற எளிய, விலை குறைவான உணவுவகை ரொட்டி மட்டுமே.

எனவே உலக ரொட்டி தினம் முன்னிட்டு கும்பகோணம் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் குடந்தை அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் 1000 க்கும் மேற்பட்ட ரொட்டி பாக்கெட் உள் மற்றும் புற மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டது.

மருத்துவமனை கண்காணிப்பாளர் கமருல் ஜமால் தலைமை வகித்தார். எம்எல்ஏ. அன்பழகன் ரொட்டி பாக்கெட் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். நிலைய மருத்துவ அலுவலர் பிரபாகரன், குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் பேரமைப்பு தலைவர் சோழா. சி.மகேந்திரன், செயலாளர் சத்தியநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/