தஞ்சாவூர் சூலை 21: தஞ்சை மாவட்டம் மதுக்கூா் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மண்டலக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் 100 விவசாயிகளுக்கு யூரியா உள்ளிட்ட இடுபொருள்களை பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை வழங்கினாா்.

மதுக்கூா் ஒன்றியச் செயலா்கள் இளங்கோ, கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள், வேளாண் உதவி அலுவலா் பூமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனா். அட்மா திட்டப் பணியாளா்கள் சுகிதா அய்யா, மணி ராஜூ ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்தளித்தனா். வேளாண் அலுவலா் சாந்தி நன்றி கூறினாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/