தஞ்சை ஏப்ரல் 16 தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன இங்கிருந்து கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், வேளாங்கண்ணி நாகப்பட்டினம் காரைக்கால் திருச்சி மதுரை கோவை திருநெல்வேலி கன்னியாகுமரி புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் தஞ்சை நகருக்கு இயக்கப்படும் மாநகர பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன இங்கிருந்து தினமும் 250 க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று பரவுவதை தடுக்கும் வகையில் 209 பஸ்களிலும் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியூர்களுக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்கள் இறக்கி விட்ட பின்னர் பஸ் நிலையத்தில் மூளையில் உள்ள ஒரு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு முற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

பயணிகள் ஏறும் படிக்கட்டு கைப்பிடி மட்டும் இருப்பதில்லை தம்பிகள் உள்ளிட்டவற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது இதற்காக தனியாக ஆட்களை அமைக்கப்பட்டு தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது கிருமி நாசினித் இணைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கிறது.

பணிமனைகளில் இருந்து நேரடியாக பஸ் நிலையத்திற்கு எடுத்து வரும் பஸ்களை விட பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும் பஸ்களில் தான் அதிக அளவு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது 24 மணி நேரமும் இந்த பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது மேலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் தஞ்சை நகருக்கு இயக்கப்பட்டு வரும் பஸ்களில் கிருமினாசினியும் கரந்தையில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை