தஞ்சாவூர் ஆக: 10, தஞ்சை மாநகரில் தூய்மையாகவும் பசுமையாகவும் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை சேவை தன்னார்வ அமைப்புகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம்.

கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல் தலைமையில் நடைபெற்றது, தூய்மை மற்றும் பசுமை தஞ்சைக்காக பல முன்னெடுப்பு பணிகளை துவங்கி உள்ள மாவட்ட கலெக்டருக்கும் சிறப்பாக பணியாற்றி வரும் மாநகர அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவர்களது பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து அவரது கருத்துக்களை கேட்டறிந்து முதற்கட்டமாக தஞ்சை மாநகரில் உள்ள குளங்களையும் நீர்வழி பாதைகளையும் கண்டறிந்து மீட்பது எனவும். மக்கும், மக்காத குப்பைகளை அவரவர் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் தரம் பிரித்து மக்கும் குப்பைகளை அவர்கள் இடத்திலேயே உரமாக மாற்ற நடவடிக்கை எடுப்பது.

மக்கா குப்பை வார்டு வாரியாக தன்னார்வலர்கள் கொண்டு சேகரித்து மாநகராட்சியிடம் மறுசுழற்சிக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது எனவும். தஞ்சை மாநகரில் மரங்கள் நட ஏதுவான இடங்களை கண்டறிந்து இவ்வாண்டு இறுதிக்குள் 10,000 , மரக்கன்றுகளை நடுவது.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அரண்மனையை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி புது பொலிவு பெற செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தஞ்சை குடிமக்கள் மன்ற துணை தலைவர் டாக்டர் வரதராஜன், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் டாக்டர் குணசேகரன், அரிமா சங்க துணைத்தலைவர் குழந்தைசாமி, இன்னர் வீல் சங்க தலைவர் சங்கீதா திருவெங்கடம், அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், ஈவெட் சதீஷ்.

மற்றும் இயற்கை அறக்கட்டளை வடிவேலன், தஞ்சை தன்னார்வலர்கள் அப்துல் லத்தீப், ரெட்கிராஸ் ஜெயக்குமார், பிரகதீஸ், ஆயுதம் செய் தவச்செல்வன், உறவுகள் அறக்கட்டளை ஆலம் கான், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், இந்திய மாணவர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி, தேசிய பசுமை படை நாட்டு நலப்பணித்திட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கவின்மிகு தஞ்சை இயக்க செயலாளர் டாக்டர் ராம் மனோகர் வரவேற்றார் கூட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/