தஞ்சாவூர், செப்: 28- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் தீயணைப்புத் துறையின் மூலம் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை 2021 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் மழை வெள்ளம் மற்றும் தீ விபத்து ஆகியவற்றின் சிக்கியவர்களை எப்படி மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மூலம் செயல்முறை விளக்கம் அளித்து செய்து காட்டினர்.

எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீ விபத்துக்களை பல்வேறு வகையில் அமைப்பதற்கான செயல்முறை விளக்கமும் அளித்தனர் மேலும் ஆற்றில் விழுந்தவர்களை எப்படி மீட்க வேண்டும் எனவும் அப்படி மீட்கப்பட்டவர்கள் மயங்கி இருந்தால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எந்த முறையில் அளிக்க வேண்டும் எனவும் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது இவ்வாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார், இந்நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி | ஸ்ரீகாந்த் பயிற்சி கலெக்டர் கௌசிக் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோ பிரசன்னா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

‍செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/