தஞ்சாவூர், ஆக.28: 2021-ம்ஆண்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள தஞ்சை திருவையாறு ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை நேரடி சேர்க்கை மூலமாக பயிற்சியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய தொழில் பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. டிசி, மதிப்பெண் சான்று, சாதி சான்று போட்டோ போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாக வந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். 2020 -21, ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் எட்டாம் வகுப்பு கல்வித்தகுதி உடைய தொழில் பிரிவுகளுக்கு 8 அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அதே நாளில் சேர்க்கை ஆணை வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர்வதற்கு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும்.

இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் மேலும் விவரங்களுக்கு துணை இயக்குனர் முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் மேலும் 99 94043023, 9840950504, என்ற செல்போன் எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/