தஞ்சாவூர், பிப்.2-. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட பாஜக எம்பிக்கள் அடங்கிய குழுவினர் தஞ்சை கலெக்டரை சந்தித்து விண்ணப்பம் கொடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர்.

ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் பி.ஜே.பி யின் துண்டுதலால் புகார் எழுப்பினர். மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பி.ஜே.பி போராட்டங்களும் நடத்தினர். இதற்கிடையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், உண்மையை கண்டறிவதற்காக விசாரணை என்ற பெயரில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா 4 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.

அந்த குழுவினரான எம்பியும் மத்தியபிரதேச மாநில பாஜக துணைத் தலைவருமான சந்தியா ரே, தெலுங்கானாவை சேர்ந்த முன்னாள் எம்.பி விஜயசாந்தி, முன்னாள் பாஜக மகளிரணி செயலாளரும் , மகாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவரும், மகளிர் உரிமைப் போராளியுமான சித்ரா தாய் வாக், கர்நாடக மாநில மகளிர் அணி தலைவர் கீதா விவேகானந்தா, ஆகியோர் கொண்ட குழுவினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து விரைந்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தினர்.

முன்னதாக இந்த குழுவினர் அரியலூர் மாவட்டம் வடுகம் பாளையம் உள்ள மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி கூறினர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனை சந்தித்து இக்குழுவினர் விசாரணையை விரைந்து முடிக்குமாறும், இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர்.

பின்னர் இக்குழுவினர் தஞ்சையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்னைக்கு சென்றனர். முன்னதாக இக்குழுவினருடன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, அரியலூர் மாவட்ட தலைவர் ஐயப்பன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ், பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன், வழக்கறிஞர் ராஜேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விஜயசாந்தி நிருபர்களிடம் கூறியதாவது; ஆட்சியரை சந்தித்து நடந்த விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். வழக்கு சி.பி.ஐ.,க்கு சென்றதால், அவர் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டினார். இருப்பினும் முழுமையாக நாங்கள் கூறியதை கேட்டுக்கொண்டார். இறந்த மாணவியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும். இந்த மாணவி லாவண்யாவிற்கு நடந்தது போல, மற்ற மாணவிகளுக்கு நடக்க கூடாது. அது மிகவும் கஷ்டமாக இருக்கும். மதமாற்ற சட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது, மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நாள் மட்டும் வந்த இவர்கள் சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்திற்கும் செல்லவில்லை மற்றும் அங்கு வசிக்கும் மக்கள் படிக்கும் மாணவர்கள் யாரையும் விசாரிக்கவில்லை நேரடியாக ஆட்சியரை சந்தித்து விண்ணப்பம் தருவதும், லாவண்யாவின் தந்தை மற்றும் சிறிய தயாரை சந்தித்து அவர்களுக்கு இவர்கள் துணை நிற்கும் பிம்பத்தை உண்டாக்குவதும் இந்த வழக்கை திசை திருப்புவதற்காகவே என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

மேலும் அந்தக் குழுந்தைக்கு அவரது சிறிய தயாரின் மூலமாக கொடுமை நடந்துள்ளதாக கூறப்படுவதை சிறிதும் இவர்கள் கேட்காமல் அவரைக் கொண்டு பள்ளியில் மத மாற்ற திட்டம் நடந்துள்ளது என்று கூற வைப்பது, தமிழ்நாட்டில் திட்டமிட்டு மத கலவரத்தை கொண்டு வரவும், இது போன்ற கிறித்தவ பள்ளிகளுக்கு அச்சுறத்தலை தந்து அவர்களது கல்வி பணிக்கு இடையூறு உண்டு செய்யவும் தான் பி.ஜே.பி செய்கின்றது என மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தந்த குழுவினர் நேரடியாக ஆட்சியரிடம் விண்ணப்பம் தந்ததையும் மேலும் முழுமையாக விசாரித்து அறிக்கை அளிப்போம் என்றுள்ளனர் ஆனால் இன்றே அவர்கள் கிளம்பி சென்னை சென்று விட்டதாக செய்திகள் கூறுகின்றது.

அதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். மாணவியின் குடும்பத்தை சந்தித்துள்ளோம். கலெக்டரிடம் விளக்கம் அளித்துள்ளோம். முழுமையாக விசாரித்து, ஜே.பி.நட்டாவிடம் அறிக்கை அளிப்போம். மாணவிக்கு நல்ல நீதி கிடைக்கவேண்டும். மதமாற்றம் தொடர்பாக இல்லை, வேறு எந்த விஷயத்திற்காகவும் மாணவிகள் தற்கொலை செய்துக்கொள்ளவது தவறானது. தைரியமாக எந்த விஷயமாக இருந்தாலும் மாணவிகள் சந்திக்க வேண்டும். பெற்றோர் உங்கள் மீது எவ்வளவு ஆசை வைத்து இருப்பார்கள். நீங்கள் தற்கொலை செய்துக்கொண்டு இறப்பது ஒரு நிமிடத்தில் முடிந்தும் விடும், வாழ்வு முழுவதும் உங்கள் பெற்றோர்கள் கஷ்டப்படுவார்கள். வாழ்வில் போராட வேண்டும். இறந்த மாணவி நல்ல படிப்பக்கூடியவர். 17 வயது என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளார்.

பி.ஜே.பி ஆளும் உத்திரபிர‍தேசம் ஹாத்ரஸ் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட சமூத்தை சார்ந்த பெண்ணை அம்மாநிலத்தின் முதல்வரின் சாதியை சார்ந்த நான்கு இளைஞர்கள் பாலியல் வல்லுறவு செய்து இறந்த சூழுலில் அங்குள்ள காவல் துறை குழந்தையின் சடலத்தை அவர்களே கொளுத்தினர் அது குறித்து பி.ஜே.பி யின் எந்த மாநிலத்துக்காரர்களும் வாய் திறக்கவில்லை.

ஆனால் தமிழ்நாடு அரசு மிக விரைவாக மாணவியின் வாக்குமூலத்திற்கு இணங்க நடவடிக்கையில் இறங்கி விடுதி காப்பாளர் சகாயமேரி அவர்களை கைது செய்துள்ள போதிலும் விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் இந்த குழுவினர் கூறுவது உள்நோக்கம் கொண்டது என அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அந்த மாணவி மதமாற்றத்தை குறித்து ஏதுவும் கூறாத சூழலில் “மதமாற்றத்திற்காக கட்டாயப்படுத்தியாக அந்த மாணவி கூறியுள்ளார்” என்று இக்குழுவினர் கூறியுள்ளனர்.
இறந்த மாணவியின் தந்தையார் தி.மு.க கழக உறுப்பினராக உள்ளவர் என்று சம்பந்தம் இல்லாத விடயங்களை கூறிச் சென்றுள்ளனர், இது சரியான ஆய்வாகவே இருக்காது என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

செய்தி தஞ்சை டுடே
https://thanjai.today/