தஞ்சாவூர் செப்.19- தஞ்சை மாவட்டத்தில் உழவர்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய வேளாண் வணிகத் துணை இயக்குனர் மரிய ரவி விஜயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், திருக்காட்டுப்பள்ளி, ஆகிய ஊர்களில் உழவர் சந்தை அமைந்துள்ளது.

இந்த உழவர் சந்தைகளை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுத்து அரசு செயல்படுத்தி வருகிறது, உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்று லாபம் அடையலாம் விவசாயிகளுக்கு கடைக்கு வாடகை கிடையாது.

எடை போட தராசு மற்றும் பிற வசதிகள் இலவசமாக செய்து தரப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு கடை ஒதுக்கீடு செய்யப்படுகிறது விவசாய ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு கடை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பொதுமக்கள் உழவர் சந்தைகளை பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள் வாங்குவதன் மூலம் வெளியில் விற்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்களை விட 15 சதவீதம் விலை குறைவாக சரியான எடையிலும் அன்றைய தினம் விவசாயிகளின் வயலில் பறித்துக் கொண்டுவரப்படும் வரப்படும் தரமான காய்கறிகள், பழங்கள், கீரைகள், வாழை, கிழங்கு வகைகள் பசுமை மாறாமல் ஒரே இடத்தில் விவசாயிகளிடம் நேரடியாக தரமானதாக வாங்க வகை செய்யப்படுகிறது.

இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் அந்தந்த உழவர் சந்தை அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரடியாக சென்று விவரம் அறிந்து கொள்ளலாம் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/