தஞ்சாவூர்: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை நினைவூட்டும் தமிழக அரசு ஊர்திகளை அனுமதிக்காத ஒன்றிய அரசை கண்டித்து வல்லம் அருகே பிள்ளையார்பட்டியில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட இணை செயலாளர் சந்துரு தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் விஜயகுமார், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆட்டோ ஏகாம்பரம், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பாக்கியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/