திரையரங்குகள் மால்களில் 50 சதவீதம் அனுமதிப்பதை போல் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோவில் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கக் கோரி நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்ததை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது திருவிழாக்கள் சமயக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதனை நம்பி உள்ள பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே திரையரங்குகள் மால்கள் உள்ளிட்டவைகள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கியது போல் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் கோவில் திருவிழாக்கள் சமய நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தங்களுக்கு 2000 ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார்கள் இதைக்கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது எனவே 20 ஆயிரம் ரூபாய் ஒரு குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.