தஞ்சாவூர்,அக்.30- தஞ்சையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி வாகனங்களில் தீ பிடிக்காமல் தடுப்பது எப்படி?ஒருவேளை தீப்பிடித்தால் மாணவ-மாணவிகளை பத்திரமாக வெளியேற்றுவது எப்படி? என்பது குறித்து இன்று விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவுபடி நிலைய அலுவலர் திலகர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் செல்வம், யோகேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர் பள்ளி வாகனங்களில் தீ பிடிக்காமல் தடுப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/