தஞ்சை மார்ச்.07- தஞ்சை மத்திய பாசிச பாஜக அரசின் மக்கள், வேளாண் விரோத 3 கருப்புச் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி, குளிர், வெயில், பனியென்றும் பாராமல், தன்னெழுச்சியாக, குன்றா வேகத்துடன், டெல்லியில் 100 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சனிக்கிழமை அன்று தஞ்சை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி, மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. 

தஞ்சை 

தஞ்சை ரயிலடியில் கருப்புப்பட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் (சிபிஎம்) பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் (சிபிஐ) வீரமோகன் கண்டன உரையாற்றினார். 

மக்கள் அதிகாரம் தேவா, இந்திய தேசிய மாதர் சம்மேளனம் விஜயலட்சுமி, சிபிஐ செல்வகுமார், ஏஐடியுசி துரை.மதிவாணன், விவசாயிகள் சங்கம் ஞானமாணிக்கம், சிஐடியு கே.அன்பு, இந்திய மாணவர் சங்கம் அரவிந்தசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, மாதர் சங்கம் வசந்தி, சாந்தா, வாலிபர் சங்கம் கோஸ்கனி, ஹரிபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பட்டுக்கோட்டை 

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் (சிபிஐ), தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி (சிபிஎம்) ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், சிபிஐ கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், உலகநாதன், ஏஐடியுசி தில்லைவனம், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் பி.காசிநாதன், ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், நகரச் செயலாளர் எம்.எம்.சுதாகர், நிர்வாகிகள், எம்.வீரபாண்டியன், சிவசிதம்பரம், ரோஜா ராஜசேகரன், சமூக ஆர்வலர் தாமரை குமரகுரு மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.