தஞ்சை பிப். 23 தஞ்சை :பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.

மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம் திமுக சட்டதிருத்த குழு உறுப்பினர் இறைவன் மாவட்ட பொருளாளர் அண்ணா தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன் மாநில மகளிர் தொண்டரணி துணை தலைவர் காரல் மார்க்ஸ் தலைமை கழக பேச்சாளர் இளமதி கண்மணி இளையபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் இதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர் மேலும் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதனை திமுக தலைமை கழக பேச்சாளர் கண்மணி இளையபாரதி மற்றும் திமுக நிர்வாகி ஒருவரும் தலையில் தூக்கி வைத்து இருந்தபடி முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி அமைப்பாளர் சன். ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி, உலகநாதன், முரசொலி செல்லக்கண்ணு, கௌதமன், முருகானந்தம், செல்வகுமார், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா ஒன்றிய குழு தலைவர்கள் வைஜெயந்திமாலா பார்வதி உட்பட ஏராளமான திமுக தொண்டர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.