தஞ்சாவூர் அக் 30: திரிபுரா சம்பவத்தை கண்டித்து தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் எஸ்டிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திரிபுராவில் கடந்த ஒரு வாரக் காலத்தில் 16 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 3 வீடுகள் இடிக்கப்பட்டு, ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டது உள்ளிட்ட 27 வன்முறைச் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன.

வன்முறைக்கு இலக்கான முஸ்லிம்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரக்காரர்களை கைது செய்யாத திரிபுரா அரசை கண்டித்தும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக அய்யம்பேட்டை பஸ் நிலையத்தில் நடைபெற்ற எஸ்டிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது பஷீர் தலைமை தாங்கினார்.

பாபநாசம் தொகுதி தலைவர் முஹம்மது சலீம் வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், SDPI மாவட்ட தலைவர் ரியாஸ் அஹமது, பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை நகர பொறுப்பாளர் யாசர் அரஃபாத் கண்டன உரை நிகழ்த்தினர். தஞ்சை தொகுதி தலைவர் சர்புதீன் கண்டன கோஷம் நிகழ்த்தினார். பாபநாசம் தொகுதி செயற்குழு உறுப்பினர் மர்ஜுக் நன்றி உரை நிகழ்த்தினார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/