தஞ்சாவூர்: கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தஞ்சாவூா் குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை முன்பு கரும்பு உற்பத்தியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், 2020 – 21 ஆம் ஆண்டு அரைவை பருவத்துக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்குரிய நிலுவைத் தொகை ரூ. 18 கோடியை உடன் வழங்க வேண்டும்.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி கரும்பு விலை டன்னுக்கு ரூ. 4,000 விலையை நடப்பாண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

கா்நாடக அரசுக் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதை நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாகத் தலையிட வேண்டும்.

கரும்பு விவசாயிகள் வாங்கிய பயிா் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்கத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் திருப்பதி வாண்டையாா், செயலா் கோவிந்தராஜ், பொருளாளா் அா்ச்சுணன், துணைத் தலைவா் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/