தஞ்சை மே 29: தஞ்சாவூா் விளார் சாலை இந்திரா நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

லட்சத்தீவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக அலுவலா் பிரபு கோடா படேலின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், பிரபு கோடா படேலை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் ஜெய்னுல்ஆபிதீன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகிகள் செந்தில்குமார், ஜாகிர் உசேன், அப்துல் நசீா், மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ஜீவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் குருசாமி, ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்