தஞ்சாவூர் சன 11- கோவை வெள்ளலூரில் உள்ள தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்களை கண்டித்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அண்ணா சிலை அருகில் பேருந்தை மறித்து திராவிடர் கழகத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் தலைமை ஏற்றார். ஒரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் மாநல். பரமசிவம், திருவோணம் ஒன்றிய செயலாளர் அரசு இளங்கோ, நகர தலைவர் பேபி ரவிச்சந்திரன், நகர செயலாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன் மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, மாநில பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா. இராமகிருஷ்ணன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன், ஒன்றியத் துணை செயலாளர் நா. பிரபு, நகர இளைஞரணி தலைவர் பேபி. ரமேஷ், நகர இளைஞரணி செயலாளர் பு செந்தில், ஒன்றிய விவசாய அணி செயலாளர் க. அறிவரசு, ஒக்கநாடு மேலையூர் பெரியார் நகர் அ. உத்திராபதி, மண்டலகோட்டை செந்தில், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் பாலு, ஒக்கநாடு மேலையூர் சாமி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.


க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/