தஞ்சை சூலை.7 இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்திய ஒன்றிய அரசால் நடத்தப்படும் அய்.அய்.டி கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு என்பதே பின்பற்றுவதில்லை, இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேறி சேர்கின்றனர்.
இவ்வாறு சேர்ந்தாலும் ஆண்டிற்கு ஒன்றோ இரண்டோ மாணவர்கள் ஒவ்வொரு அய்.அய்.டி யிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதனை விசாரிக்கும் போது உயர் சாதிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாரபட்சம் மற்றும் அழுத்தத்தால் இவை நடைபெறுகின்றது என்று தெரிய வருகின்றது.

சென்னை அய்.அய்.டி யில் பணிபுரிந்த உதவிப் பேராசிரியர் விபின் சாதிய பாரபட்சத்தால், பதவி விலக வேண்டிய சூழல் மற்றும் ஐஐடியில் நிலவும் உயர்சாதி ஆதிக்கம், அங்கு தொடர்ந்து நிலவும் தீண்டாமை, இவை குறித்து ஒன்றிய பாஜக அரசு உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.
இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தஞ்சை ரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள், என்.சிவகுரு, ஆர்.கலைச்செல்வி, கோ.அரவிந்த் சாமி, என்.குருசாமி, களப்பிரன், சத்தியநாதன், மற்றும் ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி நிர்வாகிகள், சிஐடியு, மாதர், மாணவர் சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/