தஞ்சை பிப்: 13, தஞ்சை அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் சார்பில் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் தலைவர் மோகன் தலைமை தாங்கினார், செயலாளர் பொருளாளர் குரு மூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

தஞ்சை ரயில் நிலையம் முன்பு கட்டுமானப் பொருள்களான இரும்புக்கம்பி மின்சாதனப் பொருள்கள் மணல் கம்பி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருள்கள் முந்திய விலையை காட்டிலும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது, பொதுமக்களுக்கும் கட்டிட ஒப்பந்தக்காரர்கள் இந்த விலை ஏற்றத்தால் மிகவும் ஏழை எளிய நடுத்தர மக்களும் இந்த விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அரசு கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனவும், கட்டுமானப் பொருள்களான கம்பி மணல் செங்கல் எலக்ட்ரிக்கல் பொருள் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் முன்னாள் தலைவர் ஐயப்பன் குமார் கல்யாணசுந்தரம் இளஞ்சேரன் சோமசுந்தர பாரதி ரவிச்சந்திரன், பத்மநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.