தஞ்சாவூர் அக்,11- தஞ்சை திருவாரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் டெல்டா மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் தஞ்சையை அடுத்த பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை திருச்சி கடலூர் அரியலூர் பெரம்பலூர் ஆகிய 8. மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் ஓட்டப் போட்டிகள் குண்டு எறிதல் வட்டு எறிதல் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் மும்முனை தாண்டுதல் வட்டு எறிதல் ஈட்டி எறிதல் உட்பட 103 வகையான போட்டிகள் நடைபெற்றது இதில் 12 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு தஞ்சை மாவட்ட தடகள சங்க தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட தடகள சங்க தலைவர் அன்பழகன் எம்எல்ஏ அரசு நிறுவனங்களின் இயக்குனர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கி பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது தமிழகத்தில் விளையாட்டு துறையில் உலக அளவில் முன்மாதிரியாக மாற்ற பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.
சென்னையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி, 4 ஒலிம்பிக் அகடமி ஒவ்வொரு தொகுதியிலும் 3, கோடி ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் தேவையான அனைத்து இடங்களிலும் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்யவும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அவர்கள் தகுதிக்கு ஏற்ப வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
விரைவில் வெளிநாட்டிலிருந்து வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் அழைத்துவரப்பட்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஊட்டியில் 40 ஏக்கரில் விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் நிலவும் தற்போது அதை சமாளிக்கும் வகையில் உயர்ரக பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது தமிழகத்தில் காவிரி ஆற்றில் 22 இடங்களில் இருந்து ஐஐடி தண்ணீரின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து மருத்துவ கழிவுகள் கலப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கான ஆய்வு பணிகளை தொடங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் இதை அடுத்து இதனை கண்காணிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார் விடுதியில் தடகள சங்க செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/