தஞ்சை, ஜன.25- கொரோனா பரவலால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் முகாம் நடைபெறவில்லை. அதற்கு பதில் அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். அந்த வகையில் குருங்குளம் மேற்கு ஊராட்சி தலைவர் கோகிலா தனது கணவர் சிவக்குமாருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.

பின்னர் அவர் பெட்டியில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
குருங்குளம் மேற்கு ஊராட்சி மின்னாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் என்னை தேசிய கொடியை ஏற்ற விடாமல் சிலர் தடுக்கின்றனர். எனவே அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை காக்க வேண்டும். தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/