தஞ்சாவூர் பிப்.9- உள்ளாட்சித் .திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம்! போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் சங்க கூட்டத்தில் முடிவு கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டுவரும் ஏஐடியூசி ஓய்வுபெற்றோர் சங்கத்தின் உறுப்பினர் கூட்டம் கீழராஜவீதி சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் மல்லி. ஜி. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை நடைபெற்ற பணிகள் குறித்துப் பேசினார். மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன்,ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், சங்க பொருளாளர் எஸ்.பாலசுப்ரமணியன்ஆகியோர் ஓய்வு பெற்றோர் நிலை குறித்து பேசினார்கள். நிர்வாகிகள் கே.சுந்தரபாண்டியன், எஸ்.மனோகரன், பொறியாளர் முருகையன், ஏ.அருள்தாஸ், ஏ.இருதயராஜ், என்.ஞானசேகரன், பி.குணசேகரன் டி.தங்கராசு,ரெஜினாடு ரவீந்திரன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் எம்.மாணிக்கம் நன்றி கூறினார். கூட்டத்தில் பிப்ரவரி 19 அன்று நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை மாநகரத்தில் 51 வார்டுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

தன்னலமற்ற, அர்ப்பணிப்பான மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் வரும் மார்ச் ஒன்றாம் தேதியன்று ஐம்பதாவது பொன்விழா ஆண்டு காணும் நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் புதுப்பொலிவுடன் இயக்கப்பட வேண்டும், கடும் நிதி நெருக்கடியில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு போதுமான நிதி உதவி அளிக்கவேண்டும் என்கின்ற கோரிக்கையும்.

தொழிலாளர்களுக்கும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்க வேண்டும் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் அகில இந்திய அளவில் தொடர்ந்து விருது பெற்று அரசுக்கு பெருமை சேர்த்து வருவதையும், பெரும் பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்து சேவை செய்து வருவதற்கு காரணமாக இருந்து வந்துள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பொன்விழா ஆண்டில் நிலுவையில் உள்ள மிக முக்கியமான கோரிக்கையான அகவிலைப்படி உயர்வுகளை ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்குவதுடன் நிலுவைத்தொகையும் வழங்கவேண்டும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு இருபத்தி ஒரு மாத காலமாக ஓய்வூதிய பலன்கள் ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம் உடனடியாக பேசி முடிக்க வேண்டும் ,அரசு ஓய்வூதியர்களுக்கு அமுல்படுத்தம் மருத்துவ காப்பீட்டு, குடும்ப நலநிதி திட்டங்கள் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/