தஞ்சை மே 26: தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு மருத்துவா்கள் உயிரிழந்துள்ளனா்.

கும்பகோணம் சாந்தி நகரில் தனியார் நீரிழிவு சிகிச்சைக்கான மருத்துவமனையை நடத்தி வந்தவா் மருத்துவா் சித்தார்த்தன் (52). இவருக்கு சில நாள்களாக காய்ச்சல், சளி இருந்ததால், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதேபோல, கும்பகோணம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் அப்துல்அஜீம் (75). காது, மூக்கு, தொண்டை மருத்துவரான இவா் ஆயிகுளம் எதிரே மருத்துவமனை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அப்துல்அஜீம் உயிரிழந்தார்.