தஞ்சாவூர் பிப்: 4, தஞ்சையில்       உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்து தானும் சைக்கிள் ஒட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பேரணியில் முகக் கவசம் அணிய வேண்டும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் மேலும் புற்றுநோய் குறித்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெறவேண்டும், ரத்ததானம் செய்ய வேண்டும், உள்ளிட்ட பதாகைகளை சைக்கிள் முன்பு கட்டி கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்த சைக்கிள் பேரணி தஞ்சை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து குந்தவை நாச்சியார் கல்லூரி புதிய பேருந்து நிலையம் மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் வந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் மருத்துவர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டுவதன் நன்மை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தி க.சசிகுமார், நிருபர்.
தஞ்சை.