தஞ்சாவூர் நவ 09: ஏமாறாதீங்க… தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிமாநிலத்தில் இருந்து உங்கள் வீட்டிற்கு கொரியர் அனுப்புவார்கள். அவர்களை நாம் தொடர்பு கொள்ளும்போது உங்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துள்ளோம். கம்பெனி சார்பாக ரூ.25 லட்சம் பரிசாக உங்கள் அக்கவுண்ட்டில் வழங்கப்படும்.

அதனால் நீங்கள் உங்களுக்கு அனுப்பிய அப்ளிகேஷனில் உங்களின் முழு விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பும்படி சொல்வார்கள். இது முற்றிலும் பொய்யானது. பொதுமக்கள் உங்களின் தனிப்பட்ட விபரத்தினை எவருக்கும் அனுப்ப வேண்டாம்.

இதுபோன்று யாராவது உங்களை ஏமாற்ற முயற்சி செய்தால் Thanjavur district cyber crime 155260 என்ற நம்பருக்கோ http: //cybercrime. gov. in என்ற ஈமெயில் ஐடிக்கோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.