தஞ்சை சூன் 15 : கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து திருவையாறு பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் மதுபானம் வாங்க கொள்ளிடம் ஆற்றில் நீந்தி அரியலூர் மாவட்டத்திற்கு படையெடுத்தனர்.

தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை என்று அறிவித்திருந்தது. பக்கத்து மாவட்டமான அரியலூரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் திருவையாறு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தண்ணீரில் நீந்தி அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு சென்று மதுபானங்களை வாங்கிகொண்டு மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் நீந்தி திருவையாறு பகுதி வருகின்றனர்.

ரோட்டில் இருந்து பார்க்கும்போது பக்கத்து மாவட்டத்திற்கு திருவிழாவிற்கு செல்வதுபோல் ஆண்கள் தண்ணீரில் நீந்தி செல்வதை பார்க்க முடிந்தது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்