நீவர் மற்றும் புரவி புயல்களால் தஞ்சை மாவட்டம் முழுவதும் மிக அதிமாக மழை பெய்தது, இந்த தொடர் மழை உழவர்களுக்கு நன்மை தந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்

இந்த தொடர் மழையால் பல பயிர்கள் சேதமடைந்துள்ளது, குறிப்பாக மக்காச் சோளப் பயிர்கள் வெகுவாக சேதமடைந்துள்ளது என்று உழவர்கள் கூறுகின்றனர்இ பொதுவாக கிலோவுக்கு 20 ரூபாய்க்கு கிடைக்கும் மக்காச் சோளம் தற்போது 8 ரூபாய்க்கு வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து வாங்கி செல்கிறார்கள்.

தொடர் மழையால் மக்காச்சோளத்தின் தரமும் குறைந்து உள்ளது, மக்காச்சோளம் வழக்கமாக ஏக்கருக்கு 80 மூட்டை விளைச்சல் கிடைக்கும், ஆனால் தற்போது 15 மூட்டைகள் மட்டுமே கிடைக்கின்றன, மக்காச்சோள பயிருக்கு பயிர் காப்பீடும் கிடையாது என அதிகாரிகள் கூறுகின்றனர், அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மக்காச்சோள பயிருக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று கூறுகின்றனர்.

புதிய வேளாண் மசோதா நிறைவேறினால், உழவர்கள் இது போன்று அரசிடம் இழப்பீடு கேட்பதற்கு எந்த வித வாய்ப்பும் இல்லை என்பதும் உழவர்களின் குமுறல்.

செய்தி ம.செந்தில் குமார்.