தஞ்சை பிப்.20 ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை ஒன்றியக் குழு சார்பில் வல்லம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


மாவட்ட குழு உறுப்பினர் கே. அபிமன்னன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ கண்டன உரையாற்றினார். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.சங்கிலி முத்து, எல்.ராமராஜ், மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர்கள் வனரோஜா, பார்வதி, வல்லம் கட்சி கிளை செயலாளர் அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.