தஞ்சை பிப்.09–

தஞ்சாவூர் மாஸ் திருமண மகாலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இடைக்கமிட்டி செயலாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்திற்கு, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.லாசர் ஆகியோர் கலந்து கொண்டு, இன்றைய அரசியல் நிலவரம், தேர்தல் பணிகள், கட்சி கொள்கை, செயல்திட்டம் குறித்து பயிற்சி வகுப்பில் விளக்கவுரையாற்றினர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்கள் கோ.நீலமேகம் (தஞ்சாவூர்), மணிவேல் (பெரம்பலூர்), மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி புறநகர், திருச்சி மாநகர், பெரம்பலூர் மற்றும் விடுபட்ட மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இடைக்கமிட்டி செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

படம் கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பேசுகிறார். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டோரைக் காணலாம்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.