தஞ்சை, பிப்,8- தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மாணவி லாவண்யா தற்கொலை வழக்குத் தொட ர்பாக கைது செய்யப்பட்ட விடுதிக காப்பாளர் சகாயமேரிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது. மேலும் பள்ளி நிர்வாகி ராக்லின் மேரிக்கும் முன் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷம் குடிந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரி என்பவரை கைது செய்தனர்.

ஆனால் விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். இந்த சர்ச்சை குறித்து பல்வேறு போராட்டங்களும் நடந்தன. இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் வழக்குத்தொடுத்தார். விசாரணையில், தமிழ் திரைப்படங்களை எடுத்துக்காட்டாகக் கூறி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற த்தில், ஜாமீனில் கோரி சகாயமேரி மனுநாக்கல் செய்தார். இதன் மீது நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்.

இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்லின்மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் எனப் பெற்றோர். பா.ஜா.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற விசார ணைணயத் தொடர்ந்து ராக்லின்மேரிக்கு முன் பிணை வழங்கப்பட்டது

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/