தஞ்சை சூன் 26 : தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

தஞ்சாவூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு தலைமை வகித்து ஏலத்தை தொடங்கிவைத்தாா். பாபநாசம் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி முன்னிலை வகித்தாா்.

ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த 250 விவசாயிகள் 545 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்து ஏலத்தில் கலந்து கொண்டனா். விவசாயிகள் ஏலத்திற்கு எடுத்து வந்த பருத்தியின் மொத்த மதிப்பு ரூ. 37 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். ஏலத்தில் விழுப்புரம், பண்ருட்டி, சேலம், செம்பனாா்கோவில், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்திக்கு விலை நிா்ணயம் செய்தனா்.

ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக 7,309 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக 6,319 ரூபாய்க்கும் சராசரியாக 6,869 ரூபாய்க்கும் ஏலம் போனது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்