தஞ்சாவூர் செப் 24- தஞ்சை குருங்குளம் சர்க்கரை ஆலையில் ஊழல் அலுவலரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது கண்டித்து கரும்பு உழவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை அருகே குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமை வகித்தார் பொதுசெயலாளர் திருப்பதி செயலாளர் கோவிந்தராஜ் பொருளாளர் அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்த உதவி செயற்பொறியாளர் கணேசமூர்த்தி என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்ததால், அவரை மாற்ற கூறி அப்போதே கடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் பின்னர் அப்போதைய சர்க்கரை துறை ஆணையர் ரீட்டா ஹரிஷ் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பணியிடமாற்றம் செய்தார்.
அதற்குப் பிறகு ஆலையில் பணிகள் சிறப்பாக நடந்து வந்தது, இந்நிலையில் தற்போது மீண்டும் ஊழல் அலுவலரான கணேசமூர்த்தி அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் பணியில் உள்ளார். இதனால் ஆலையில் மீண்டும் ஊழல் தலைவிரித்தாடும், அதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, எனவே இவரை உடனடியாக வேறு ஆலைக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
உடனே பணியிடை மாற்றம் செய்யவில்லை என்றால் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவர் என வலியுறுத்தப்பட்டது. மேலும் 2021-2022 ஆண்டு அரவை பருவத்தை வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும் 2021 22 அரவை பருவத்திற்கு கரும்பு வெட்டும் உழவர்களுக்கு கூலியை அரசே ஏற்க வேண்டும் ஆலையில் உபரியாக இருக்கும் இடத்தில் சோலார் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும். சர்க்கரை ஆலையில் அரசு ஊதியம் பெறும் அலுவலர் பொறியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/