தஞ்சை மாநகராட்சிக்குள் இயங்கும், முடிதிருத்தகம், அழகு நிலையம், ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் நியைலயங்கள் இன்றிலிருந்து 30 நாட்களுக்குள் அதற்கான உரிமம் பெற ‍வேண்டும் என்று தஞ்சை மாநகராட்சி ‍அறிவித்துள்ளது.

அவ்வாறு உரிமம் வாங்கத் தவறும் கடைகளுக்கு சீல் வைத்து மூடப்படுவதோடு, சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விநியோகிக்கப்படுவதாகவும் அதனைப் பெற்று பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும் என்று தஞ்சை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

செய்தி : ம.செந்தில்குமார்