தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான கீழவாசல் சரபோஜி சந்தையில் வணிகம் செய்ய கடைகள் மாத வாடகைக்கு தயாராக உள்ளன. வணிக நோக்கம் உள்ளவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான கீழவாசல் சரபோஜி சந்தையில் கீழ் கண்டுள்ள அளவு கொண்ட கடைகள் வாடகைக்கு தயாராக உள்ளன. 91 சதுர அடி கொண்ட 75 கடைகள், 60 சதுர அடி கொண்ட 10 கடைகள், 40 சதுர அடி கொண்ட 4 கடைகள், 70 சதுர அடி கொண்ட 38 கடைகள்.

80 சதுர அடி கொண்ட 9 கடைகள், 102 சதுர அடி கொண்ட 7 கடைகள், 111 சதுர அடி கொண்ட 57 கடைகள், 126 சதுர அடி கொண்ட 50 கடைகள், 137 சதுர அடி கொண்ட 5 கடைகள், 145 சதுர அடி கொண்ட 6 கடைகள், 188 சதுர அடி கொண்ட 3 கடைகள், 252 சதுர அடி கொண்ட 18 கடைகள், 312 சதுர அடி கொண்ட 4 கடைகள் உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/