தஞ்சாவூர் டிச 5 – தஞ்சை பகுதியில் உள்ள கடைகளில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரி அதில் நடைபாதை விட புதிதாக கட்ட மாநகராட்சி பணிகள் தொடங்கி நான்கு கடைகள் துணிக்கடைகள் செல்போன் பழுது பார்க்கும்கடை தேனீர்க் கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன.

இந்த கடைகள் அனைத்தும் மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ளது எனவும் இந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் மாநகராட்சி வலியுறுத்தியது ஆனால் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஏற்கனவே இருக்கும் கடைகளுக்கு பின்பகுதியில் கட்டித்தர வேண்டும் என விரும்பினால் இந்த நிலையில் கடைகளுக்கு வழங்கப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனால் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் 8 நாட்களாக காத்திருக்கும் போராட்டம் வெடித்தது இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மார்க்கெட் பகுதியில் கடைகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது இதற்கு வியாபாரிகளும் சம்மதம் தெரிவித்து கடைகள் காலி செய்தன வியாபாரிகள் கடைகளை காலி செய்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கின.

அதன்படி அண்ணா சிலை அருகில் இருந்து ஜுபிடர் திரையரங்கம் வரை உள்ள கடைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, மேலும் இடிக்கப்படும் கட்டிடங்கள் உடனடியாக பொக்லைன் எந்திரம் லாரிகள் மூலம் கட்டப்பட்ட நிலையில் மழைநீர் வடிகால் வாய்க்காலையும்பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரிய இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உதவி பொறியாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தனர் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறுகையில் வியாபாரிகள் கடைகளை காலி செய்து தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

கடைகளுக்கு அடியிலிருந்து மழைநீர் வடிகால் வாய்க்கால் 10 அடி அகலம் 10 அடி ஆழத்திற்கு உள்ளது இந்த வாய்க்காலில் இருந்த மண் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாய்க்கால்கள் மீண்டும் கட்டப்பட்டு இதில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட உள்ளது அந்த சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு மொத்தம் 19 மீட்டர் கொண்ட இந்த சாலையின் மையப்பகுதியில் மையம் தடுப்புச் சுவர் மற்றும் விளக்குகள் அமைக்கப்படுகின்றன என்றார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/