தஞ்சாவூர்: தமிழகத்தில் கொரனோ தொற்று இரு வாரங்களுக்குள் குறைந்து விடும் என்று தஞ்சையில் ஆய்வு மேற்கொண்ட போது வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரனோ தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு முழு பொது முடக்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நாளொன்றுக்கு 800க்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தலைமையில் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் தஞ்சை ஆகிய இடங்களில் மருந்துவமனைகள், கோவிட் மையம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்

தஞ்சை கல்லு குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் ஆய்வு செய்த போது அங்கு தடுப்பு ஊசி எத்தனை பேருக்கு செலுத்தப்படுகிறது. பரிசோதனை எத்தனை பேருக்கு செய்யப்படுகிறது. மருந்துகளின் இருப்பு விபரம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் கூறிய ஆணையர் தமிழகத்தில் கொரனோவின் தொற்று கடந்த இரண்டு நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது. பாதிப்பு 1000 என்று இருந்த நிலையில் தற்போது 200 , 300 என்ற நிலையில் உள்ளது. இது இரண்டு வாரங்களுக்குள் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.