தஞ்சை மார்ச் 5 தஞ்சை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதனை கலெக்டர் கோவிந்தராவ் பார்வையிட்டு அவர் கூறியதாவது தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதியின்படி தஞ்சை மாவட்டத்தில் நிலையான கண்காணிப்புக் குழு மூலம் பல்வேறு முன்னேற்பாடு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இது போல் வாக்குச்சாவடி மையம் வாக்கு எண்ணிக்கை யங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று கண்காணிக்கப்பட்டு வருகிறது தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கு வாக்குப் பதிவு மையத்தில் பணி புரிய உள்ளஅலுவலர்கள் பணியாளர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கும்பகோணம் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி திருவையாறு பாபநாசம் திருவிடைமருதூர் வட்டம் மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்ப சுகாதாரநிலையம் துணை ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் குரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் அரசு அங்கீகரிக்கப்பட்ட 19 தனியார் மருத்துவமனையில் ரூபாய் 250 செலுத்தியும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்