தஞ்சை சூன் 29 : தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

பூதலூர் ஒன்றியம் கூத்தூர் மற்றும் அகரப்பேட்டையில் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில் பாலையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், ஆய்வக பரிசோதகர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசிகளை செலுத்தினர்.

அகரப்பேட்டையில் 180 பேருக்கும், கூத்தூரில் 170 பேருக்கும் என மொத்தம் 350 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. கூத்தூரில் 141 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்