தஞ்சை சூன் 22: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்த்து.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்துக்குட்பட்ட தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கண்ணந்தங்குடி மேலையூா் மலையேறியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை திமுக மாவட்ட பொருளாளா் எல்.ஜி. அண்ணா தொடங்கி வைத்தாா்.

கண்ணந்தங்குடி மேலையூரில் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதி மக்கள் 260- க்கும் மேற்பட்டவா்களுக்கு சுகாதாரத் துறை ஆய்வாளா் மலையப்பன் முன்னிலையில் தடுப்பூசி போடப்பட்டன.

முகாமில், ஊராட்சித் தலைவா் செந்தில், துணைத் தலைவா் ஜெயக்குமாா், கல்வி வளா்ச்சி குழு செயலாளா் வெங்கடேசன், மருத்துவ அலுவலா்கள், சுகாதார அலுவலா்கள், செவிலியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்