தஞ்சாவூர் ஆக 08: தஞ்சை மாவட்டம் திருவையாறு பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தொடக்கி வைத்தார்.

முதல்வரின் ஆணைக்கிணங்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுறுத்தலின்படி திருவையாறு பேரூராட்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருவையாறு அரசர் கல்லூரியில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இதை சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சித்தலைவர் நாகராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன், ஒன்றியச் செயலாளர் சிவசங்கரன் கலந்து கொண்டனர்.

மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபானி, பேரூராட்சி செயலர் அலுவலர் ராஜா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முகாமில் 250 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/