தஞ்சாவூர் ஆக 12: தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமை ஊராட்சித் தலைவா் நசீமா பா்வீன் தொடக்கி வைத்தாா். மருத்துவா் அருண்குமாா், சுகாதார செவிலியா் கலாவதி, பகுதி சுகாதார செவிலியா்கள் விஜயகலா, கில்டன், சுகாதார ஆய்வாளா் செல்லப்பா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் 235 பேருக்குத் தடுப்பூசியைச் செலுத்தினா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜம், கிராம நிா்வாக அலுவலா் சதீஷ், ஊராட்சிச் செயலா் ஜெயகுமாா், ராஜகிரி பெரியபள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவா் நூா்முகமது, செயலா் யூசுப் அலி, ராஜகிரி ஜமாத்தாா்கள் அஸ்ரப் அலி, முகமது ஷெரீப் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/