தஞ்சை சூன் 17: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை இணைந்து நடத்திய இந்த முகாமை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்ற நீதிபதியுமான சிவக்குமார் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.

முகாமில், பாபநாசம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் பாஸ்கரன், கம்பன் மற்றும் நீதிமன்ற அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனா்.

கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள் மற்றும் சுகாதார செவிலியா்கள் கலந்து கொண்டு, 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனா். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வ சட்ட பணியாளா் தனசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.