தஞ்சை சூலை 05: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே கரிசவயலில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே கரிசவயல் அரபி மதரஸா ஜும்மா பள்ளி வளாகத்தில் உதவும் கரங்கள் அறக்கட்டளை ஏற்பாட்டில், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கரிசவயல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து முதற்கட்டமாக 120 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி முகாமிற்கு வருகை தந்தவர்களுக்கு, உதவும் கரங்கள் தன்னார்வலர்கள் கிருமிநாசினி, முகக்கவசம் வழங்கியும், தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் உடல் வெப்பநிலை, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்து களப்பணி ஆற்றினார்.

சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், உதவும் கரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் அஜ்மீர் அலி, ஜியாவுல் ஹக், அப்துல் சமது, தமீமுல் அன்சாரி மற்றும் உதவும் கரங்கள் தன்னார்வலர்கள், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கரிசவயல் பொறுப்பு செவிலியர் விசாலாட்சி மற்றும் 4 செவிலியர்களுடன் தடுப்பூசி முகாமில் பங்கேற்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today