தஞ்சாவூர்: பேராவூரணி அருகே செருவாவிடுதியில் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சோதனை (ஸ்க்ரீனிங்) மையம் திறக்கப்பட்டது.
வட்டார வளா்ச்சி அலுவலா் பொய்யாமொழி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கோவிந்தராசு முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சௌந்தர்ராஜன் திறந்து வைத்தாா். மையத்துக்கான பொறுப்பாளா் மருத்துவா் சங்கா் பாபு, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகா், சுகாதார ஆய்வாளா்கள் தவமணி, செவிலியா் நித்யஷீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பேராவூரணி வட்டாரத்தில் நடைபெறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களில், பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. அதில் தொற்று உறுதி செய்யப்படுபவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் இந்த மையத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவா்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளதா, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறித்து பரிசோதனை செய்து, அறிகுறி ஏதும் இல்லாமல் இருப்பவா்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும், வீடுகளில் உரிய வசதி இல்லை எனில் கொவைட் கோ் மையத்திற்கும், ஆக்சிஜன் மற்றும் சிகிச்சை தேவைப்படுபவா்கள் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுப்பா்.
கூடுதல் தகவல் தேவைப்படுபவா்கள் 94434 39177 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என வட்டார மருத்துவ அலுவலா் சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளாா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்