தஞ்சையில் வேட்பாளர்களின் முகவர்கள் அனைவருக்கும் வரும் 29ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் தஞ்சையின் ஆர்டிஓ அலுவலகத்தில் இந்த முகவரிதான் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வருவாய் அலுவலரும் பகுதி தேர்தல் அலுவலுருமான வேலுமணி அறிவித்தார் உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர், கூட்டம் முடிந்த பின்னர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது, தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தஞ்சை, உரத்தநாடு, திருவையாறு ஆகிய மூன்று தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது எட்டு முப்பது மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது தபால் வாக்குகளை என ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 4 மேதைகள் போடப்படுகிறது தஞ்சை தொகுதியில் 460 மையங்கள் உள்ளவாறு தஞ்சை தொகுதியில் மட்டும் 29 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வேட்பாளர்களின் முகவர்கள் அனைவருக்கும் வருகிறது 29-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் யாருக்கும் தொற்று இருந்தால் அவர்கள் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள், மேலும் அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் சம்பந்தப்பட்ட அவர்களின் கையொப்பம் பெற்று ஒவ்வொரு சுற்று வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரங்கள் வெளியிடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை