தஞ்சை மே 13: பட்டுக்கோட்டை வட்டம் தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சோதனை மைய திறப்பு விழா நடந்தது.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாமில் பொதுமக்களிடமிருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. அதில் தொற்று உறுதி செய்யப்படுபவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் இந்த மையத்துக்கு அழைத்து வரப்படுவா்.

அவா்களுக்கு காய்ச்சல், இருமல் மூச்சுத்திணறல் எந்த அளவில் உள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறித்து பரிசோதனை செய்து, அறிகுறி ஏதும் இல்லாமல் இருப்பவா்கள் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும், வீடுகளில் உரிய வசதி இல்லை எனில் கோவிட் கோ் மையத்துக்கும், தீவிர சிகிச்சை தேவைப்படுபவா்கள் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுப்பா்.

விழாவில் வட்டார மருத்துவ அலுவலா் தேவிபிரியா, மருத்துவா்கள் பழனிமாணிக்கம், சாமி பாலாஜி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அண்ணாதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்