பட்டுக்கோட்டை மே.18 தஞ்சை மாவட்டத்தில் பொது மக்களுக்கான, முதலாவது கொரோனா கால உதவி மையம், மதுக்கூர் தமுமுக கிளை சார்பில், மதுக்கூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ள மார்டன் கன்ஸ்ட்ரக்சனில் மே.17 திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
பெரும் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில், மக்களுக்கு தேவையான ஆலோசனையும், வழிகாட்டுதலும் மிக அதிகமாக தேவைப்படுகிறது. அதற்கு உதவிடும் வகையில் மதுக்கூர் தமுமுகவின் சார்பில் இந்த உதவி மையம் திறக்கபட்டுள்ளது.
இம்மையத்தில் கபசுரக் குடிநீர் தினசரி வழங்கபடுகிறது, இரத்த அழுத்தம், காய்ச்சல் கண்டறிதல், ரத்தத்தில் ஆக்்சிஜன அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
இதற்கான துவக்க நிகழ்வில் தமுமுக மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ஃபவாஸ், பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது, மமக செயலாளர் தாஜுதீன், பொருளாலர் முகமது சேக் ராவுத்தர், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் புரோஸ் கான், மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் அப்துல் ரஹ்மான், உதவி மையம் பொறுப்பாளர்கள் ஃபர்சாத், தவ்ஃபிக், சபீர், பாசித், இம்த்தியாஸ், மர்சூக் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
24 மணி நேரமும் செயல்படக் கூடிய ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. 8056845503, 8110840420 ஆகிய எண்களில் ஆலோசனை பெறலாம். எனவே இதனைப்
பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தமமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.