தஞ்சை ஏப்ரல் :27: கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் நேற்று முதல் மூடப்பட்டது, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் முன் அனுமதி பெற்று பயிற்சிகளை மேற்க்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது, தற்போது தொற்றால் பாதிக்கப்படுவது எண்ணிக்கை பிறகு 15 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது, இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது, இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது, இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது, இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக தஞ்சையிலுள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் நேற்று முதல் மூடப்பட்டது, இதனால் நேற்று காலை முதல் வீரர்கள் பயிற்சி பெறவும் நடைபெறும் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை, இதை அறியாமல் காலையில் சத்திய விளையாட்டு அரங்கிற்கு நடைபயிற்சிக்கு மேற்கொள்வதற்காக பல்வேறு விளையாட்டு பயிற்சிகளை மேற் கொள்வதற்காக வந்த வீரர் வீராங்கனைகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் சத்யா விளையாட்டு அரங்கம் தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான நோட்டீஸ் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் நுழைவாயில் ஒட்டப்பட்டது, இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்ட ராஜ் கூறுகையில் கொரோனா பரவல் தொற்றின் காரணமாக அன்னை சத்தியா விளையாட்டு அரங்கம் அரசின் அறிவுறுத்தலின்படி மறு உத்தரவு வரும் வரை செயல்படும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் மட்டும் உரிய முன் அனுமதி பெற்று பயிற்சி பெறலாம் என்றார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை