தஞ்சை ஏப்ரல் 13,தஞ்சாவூரில் கொரோனா பரவல் அதிகமாக பரவும் நிலை நிலையில் பொது மக்கள் அலட்சியமாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வங்கியில் கூட்டமாக கூடுகின்றனர், தஞ்சை மாநகரில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் முக கவசம் அணிய வேண்டும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி கொள்ள வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் பொதுமக்களின் பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளியின்றி முக கவசம் அணியாமல் இயல்பாகவே உள்ளனர் இரண்டாவது மிகவும் பாதிக்கும் என்று அரசு எச்சரித்தும் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர், வங்கிகளில் ஒரு கூடங்களில் வாசலில் வரிசசை மற்றும் இடைவெளியை பற்றி கவலைப்படாமல், ஐம்பது, நூறு பேர் என்று கூடியிருக்கிறார்கள், இது தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு வரிசையாக அமர்வதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.